மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் பாஜக. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க்கிறது அதுவும் முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. பாஜக ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் குறிப்பாக மோடியின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை … Continue reading மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி

செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி

நாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்ற செய்தி பரபரப்புக்கு காரணம், மோடி பிரதமரக பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்திக்கவேயில்லை, ஆகையினால் இந்த செய்தி காட்டு தீ போன்று பரவியது. மோடி செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்று செய்தி பரவிய சிறிது நேரத்தில் பா.ஜ.க தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மோடி, செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்ற தகவல் தவறானது என்று பா.ஜ.க விளக்கம் அளித்துள்ளதாக செயதிகள் வெளியாகியுள்ளது. Continue reading செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி