செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி

நாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்ற செய்தி பரபரப்புக்கு காரணம், மோடி பிரதமரக பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்திக்கவேயில்லை, ஆகையினால் இந்த செய்தி காட்டு தீ போன்று பரவியது. மோடி செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்று செய்தி பரவிய சிறிது நேரத்தில் பா.ஜ.க தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மோடி, செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்ற தகவல் தவறானது என்று பா.ஜ.க விளக்கம் அளித்துள்ளதாக செயதிகள் வெளியாகியுள்ளது. Continue reading செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி