தேமுதிகவின் இன்றைய நிலை

10.03.2020 மாநிலங்களவைக்கு அறிவித்துள்ள அதிமுக வேட்பாளர்களில் தேமுதிக கட்சிக்கு இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் அனைத்து வேட்பாளர்களும் அதிமுகவின் தொண்டனையே வேட்பாளராக அறிவித்து இருப்பார். ஆனால் இன்று 2 வேட்பாளர்களை அதிமுக தன்வசம் வைத்துக்கொண்டு, ஒன்றை ஜிகே வாசனுக்கு (பிஜேபிக்கு) கொடுத்துள்ளதிலிருந்து அதிமுக தனது பாதையை இப்போழுதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போன்று மாற்றியமைத்துக் கொண்டுள்ளது என்பதை நிரூப்பித்துள்ளது. இந்த முடிவினால் தேமுதிகவை நிலைகுலைய வைத்துள்ளது என்றே சொல்லலாம். அதிமுக தேமுதிகவின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கிறது. இதனை அந்த கட்சி எப்படி எதிர்கொள்ளும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தேமுதிகாவுக்கு … Continue reading தேமுதிகவின் இன்றைய நிலை

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020

அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் அனைவருக்கும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வியல் அமைந்திட இறைவனை வேண்டுகிறோம் தாஜூதீன் Continue reading இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020

இங்கிலாந்து சொல்லும் நில நடுக்க பாடம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக! – ராமதாஸ்

ராமதாஸ் அவர்களின் ஹைட்ரோ கார்பன் விளைவுகளை பற்றி விரிவான அறிக்கை மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நீரியல் விரிசல் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தில் செயல்படுத்துவதால் நில நடுக்கம் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அத்தகைய திட்டங்களுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்திருக்கிறது. நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நீரியல் விரிசல் முறையில் பூமிக்குள் உள்ள பாறைகளை விலக்கி பாறை எரிவாயு, மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் பொருட்களை எடுப்பதற்கு இங்கிலாந்து நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வந்தது. அதனால் அந்த … Continue reading இங்கிலாந்து சொல்லும் நில நடுக்க பாடம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக! – ராமதாஸ்

பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்

என் மகன் தமீமிடம் (வயது 7), குழந்தையின் (சுஜித்) இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டேன் அதற்கு தமீம் யோசிக்காமல், அவனுடைய அம்மா அப்பா தான் என்றான். ஏன்? என்றேன் அவர்கள் தானே அவனை வெளியே விளையாட விட்டார்கள் என்றான். ஆம், குழந்தையின் பார்வையில் இது தாய் தந்தை மற்றும் அவர்களின் குடும்பம் தான் காரணம். இதைதான் இப்போழுது ரஜினியும் சொல்கிறார். எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. 70 வயதை கடந்த பெரியவர்களும் குழந்தைகள்தான் என்று. #savesujith தாஜூதீன் Continue reading பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்

ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு

திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறு மரணங்கள் தொடர்கதையாக இருக்கிறது, இதற்கு முன் நடந்த மரணங்களில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பதுதான் அனைவருக்கும் இருக்கும் இப்போதைய மிகப்பெரிய கேள்வி. அதுமட்டுமில்லாமல், குழந்தை கிணற்றில் தன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில், மேலே நாம் குழந்தையை எப்படி மீட்பது என்று தெரியாமல் பல மீட்பு … Continue reading ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு

தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்

இன்று (27-10-2019) தீப ஒளித்திருநாள் இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் இந்நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, பெரியவர்களிடம் வாழ்த்து பெற்று மகிழ்ச்சியாக இருக்கும் இந்நாளில் அனைவருக்கும் எங்களின் தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவரும் மிகவும் கவனமாக பாட்டாசுகளை வெடித்து மகிழுமாறு வாழ்த்துகிறோம். தாஜூதீன் Continue reading தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்

ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது

இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்கியது. இஸ்லாமியர்களின் ஜந்து கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது, இன்று முதல் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. முகமது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி, இன்று முதல் முப்பது நாட்களுக்கு சூரியன் தோன்றுவதற்கு முன் உணவருந்தி (சஹர்) மாலை வரை ஒருதுளி நீரைக்கூட பருகாமல் இருப்பதே ரமலான் நோன்பின் சிறப்பு. Continue reading ரமலான் மாதத்தின் நோன்பு தொடங்கியது

தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு

வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி 30 ஆம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது. … Continue reading தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு

வழக்கமான அறிக்கை!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை, தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினி ரசிகர்கள் பழக்கப்பட்ட முடிவை, இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ரஜினி. Continue reading வழக்கமான அறிக்கை!

தமிழர்களின் திருவிழா

தமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் இனக்குழு தொடர்பான விழாவாக வரலாற்றில் பார்க்கப்படுகின்றது. உழவர் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. முதல் நாளில், தான் வசிக்கும் இடத்தை சுத்தம் செய்வதை போகியாகவும் இரண்டாம் நாளில், தான் உழுது சேர்த்த உணவுப்பொருட்களை கொண்டு சமைத்து தன் குடும்பத்துடன் உண்டு மகிழ்வதை தைப்பொங்கலாகவும் மூன்றாம் நாளில், தன்னுடைய உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளைக் கொண்டாடுவதை மாட்டுப் பொங்கலாகவும் நான்காம் நாளில், … Continue reading தமிழர்களின் திருவிழா