தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு

வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி 30 ஆம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் அது வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும். இந்த புயல் 30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளது. … Continue reading தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு

செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி

நாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்ற செய்தி பரபரப்புக்கு காரணம், மோடி பிரதமரக பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்திக்கவேயில்லை, ஆகையினால் இந்த செய்தி காட்டு தீ போன்று பரவியது. மோடி செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்று செய்தி பரவிய சிறிது நேரத்தில் பா.ஜ.க தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மோடி, செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்ற தகவல் தவறானது என்று பா.ஜ.க விளக்கம் அளித்துள்ளதாக செயதிகள் வெளியாகியுள்ளது. Continue reading செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி

இந்தியாவில் நிலநடுக்கம்!

இந்தியாவின் அருணாச்சல் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 1.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு ஆனது. Continue reading இந்தியாவில் நிலநடுக்கம்!

டெங்கு – வருமுன் காப்போம்

பெரும்பாலும் டெங்குக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவும். டெங்குவினால் அதிகமான உயிர்ப்பலிகள் வருடம் தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நோயினால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளையும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வருடமும், அதிகமானோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.  டெங்கு காய்ச்சல் பற்றி அதிகமான விழிப்புணர்வுகளை மக்களுக்கு நாம் எடுத்துக் கொண்டு சென்றால் மட்டுமே உயிரிழப்புகளை குறைக்க முடியும். டெங்கு காய்ச்சல் என்றால் என்ன டெங்கு என்னும் வைரஸ் கிருமியால் காய்ச்சல் ஏற்படுவதால் இதற்கு டெங்கு காய்ச்சல் … Continue reading டெங்கு – வருமுன் காப்போம்

7 யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பு

ஒடிசா மாநிலத்தில் கமலாநகர் என்கின்ற கிராமத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. மனிதர்களால் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து நீங்கள் காட்டைவிட்டு வெளியே வராதீர்கள். உங்களுக்கு, எங்களினால் என்றும் ஆபத்து தான். Continue reading 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பு

உணர்வுகளும் சட்டங்களும்

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் மற்றும் வழிமுறைகளைச் சட்டத்தின் மூலம் மாற்ற நினைப்பதின் விளைவு, மக்கள் மத்தியில் குழப்பங்களுக்கும் மற்றும் போராட்டங்களுக்கும் வழி வகுக்கும். இப்படியான போராட்டங்கள் அண்மைக் காலங்களில் இந்தியாவில்  அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. இது மிகவும் வருந்தத்தக்கது. இதற்கிடையில், மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு அவர்களின் அரசியல் விளையாட்டை … Continue reading உணர்வுகளும் சட்டங்களும்

பெட்ரோல், டீசல் விலையேற்றம்! மாற்றத்திற்கான நேரம்!

இந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு இருப்பது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் இன்று, பெட்ரோல் ஒரு லிட்டர் சுமார் 85 ரூபாய் மற்றும் டீசல் ஒரு லிட்டர் சுமார் 77 ரூபாய் என்ற விலைக்கு சென்னையில் விற்பனையாகிக் கொண்டுருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் செப்டம்பர் மாதம் முடியும் வரை குறைந்தது 10 ரூபாய் ஒரு லிட்டருக்கு விலையேற்றம் அடைந்துள்ளது. இப்படியே … Continue reading பெட்ரோல், டீசல் விலையேற்றம்! மாற்றத்திற்கான நேரம்!

ஜனநாயகத்தை பேணுவோம்!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (29 மாநிலங்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிதான் நடைபெறுகிறது. ஆனால் யூனியன் பிரதேசங்களில் (7 யூனியன் பிரதேசங்கள்) மட்டும் மத்திய அரசின் மேற்பார்வையில் குடியரசு தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரி இந்தியா சுதந்திரம் அடைந்து 7 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அடங்கிய ஒன்றுபட்ட பகுதிகள் 1954ஆம் ஆண்டு இந்தியாவுடன் இனைக்கப்பட்டது, 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இயங்கி வருகிறது. புதுச்சேரி மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் மிகவும் சிறிய நிலப்பரப்புக் … Continue reading ஜனநாயகத்தை பேணுவோம்!

எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்

QNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது.  ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம். QNet online shopping business என்ற பெயரில் Multi-level marketing (MLM) businessயை செய்கிறார்கள். (www.qnet.net என்ற முகநூல் இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது) பல வருடங்களுக்கு முன் இவற்றை போன்று, Gold Coin business மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்று பணம் போட்டார்கள், கடைசியில் அனைத்து பணத்தையும் இழந்தவர்கள் … Continue reading எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்

கேரளாவில் பெருவெள்ளம்!

கடவுள் தேசம் இன்று தனி தேசமாக மாறியிருக்கிறது. கன மழையினால் அங்கு இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பிச் சீறி பாய்கிறது. மழை வேண்டாம் என்றாலும் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த வரலாறு காணாத மழையினால் பலருடைய உடைமைகள் இருப்பிடங்கள் அவர்களின் கண் முன்னே நீரினால் அடித்துக்கொண்டு, போய்க்கொண்டு இருக்கிறது. இதில் மனித உடல்கள் உட்பட. இயற்கையின் முன் நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று அனைவருக்கும் மறுபடியும் உணர்த்திய தருணம் இது. ஆனால் மனிதனின் மணம் இயற்கையின் அழிவை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்பதற்கு உதாரணமாகப் பல ஆயிரம் ஆதரவு கரங்கள் கடவுள் தேசத்தை நோக்கி … Continue reading கேரளாவில் பெருவெள்ளம்!