கோவிட் – 19 – புதுச்சேரி முதல்வருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்

புதுச்சேரி முதல்வர் திரு. நாராயணசாமி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த ஒரு மாதமாக அவரின் கீழ் புதுச்சேரி மாநிலம் கோவிட்-19 பாதிப்பு குறைந்து மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் அனைவருக்கும் நிம்மதி. உயிர்க்கொல்லி நோய் கோவிட்-19 இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரத்தில், தன்னுடைய நிர்வாக திறமையினால் அதிவிரைவாக செயல்பட்டு, அதே சமயத்தில் கடும் நடவடிக்கையினாலும் இன்று புதுச்சேரி கோவிட்-19 பாதிப்பு குறைந்த மாநிலமாக திகழ்கிறது. புதுச்சேரியல் சில இடங்களில் கோவிட்-19 இருப்பதை கண்டறிந்த உடனே துரிதமாக செயல்பட்டு, அந்த இடத்தை பாதுகாப்பான இடமாக அறிவித்து இன்று கோவிட்-19 மற்ற இடங்களுக்கு … Continue reading கோவிட் – 19 – புதுச்சேரி முதல்வருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்

குழந்தைகளின் எதிர்காலம் …

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பொதுத்தேர்வு சிறந்த வழி என்று 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது நமது அரசுகள். குழந்தைகளுக்கு அதுவும் 10 வயது குழந்தைக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சாத்தியப்படும் என்று நமக்குள் மிகபெரிய கேள்வியையும் மிகவும் மன வேதனையையும் ஏற்படுத்துகிறது. இந்த பொதுத்தேர்வு என்ற கொள்கை முடிவினால் ஏற்படும் பின்விளைவுகளை இந்த அரசுகள் உணரவில்லை என்பது தெளிவாகிறது. எப்படி எதிர்கொள்வது தன்னுடைய பத்தாவது வயதில், 5ஆம் வகுப்பு பொதுத் தேர்வினால் ஏற்படும் தோல்வியை குழந்தைகள் எப்படி எதிர்கொள்ளும். தன்னுடன் படித்த சக மாணவர்கள் … Continue reading குழந்தைகளின் எதிர்காலம் …

இந்தியா 2050

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் டிஸ்கவரி சேனலில் இந்தியா 2050ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை மிகவும் நேர்த்தியாகவும் அனைவக்கும் புரியும்படியும் அதே சமயத்தில் நமது இன்றைய தவறுகளை சுட்டிக் காட்டியிருக்கிறது இந்தியா 2050 ஆவணப்படம். நமக்கு இயற்கை கொடுத்த முன்னெச்சரிக்கைகளை ஒரு தொகுப்பாக காட்சிப்படுத்தி அதன் விளைவாக 2050ஆம் ஆண்டு இந்தியா எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார்கள். கற்பனைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அதே … Continue reading இந்தியா 2050

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020

அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் அனைவருக்கும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வியல் அமைந்திட இறைவனை வேண்டுகிறோம் தாஜூதீன் Continue reading இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு

#AyodhyaVerdict நேற்று (9/11/2019) உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நீதி. நீதிபதிகளின் இந்த தீர்ப்பை மனமார ஏற்றுக் கொண்டு இந்த கசப்பான நிகழ்வுகளில் இருந்து வெளியேறவேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் ஆசை. இந்த தீர்ப்பில் இஸ்லாமியர்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் ஒருவித நிம்மதியை கொடுத்து உள்ளது என்பதுதான் உண்மை, நிம்மதி மட்டுமில்லாமல் குற்ற உணர்விலிருந்து விடுபட்டுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தீர்ப்பின் படி இந்துக் கோயில் ஒன்றை இடித்து அதன் மீதுதான் பாபர் மசூதி … Continue reading பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்அவர்களின் அறிக்கை. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்திய அரசியலை ஆதிக்கம் செய்துவந்ததும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்ததுமான பாபர் மசூதி – ராம ஜன்மபூமி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு மனநிறைவு அளிப்பதாக இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தத் தீர்ப்பின் மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நீதி கிடைக்கும்வரை பொறுமையோடு காத்திருப்போம் என அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் … Continue reading பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்பாடுக்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்? – ஆனந்த மஹிந்திரா

இந்தியாவில் இருந்து செல்லும் மற்றும் வரும் விமான பயணிகள் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று கண்டுபிடிக்க முயற்சியுங்கள். 1. மற்றவர்களை விட வயதான இந்தியவர்கள் அதிகமாக பயணம் செய்கிறார்களா?2. இந்தியாவில் பலவீனமான மக்கள் அதிகம் இருக்கிறார்களா? 3. நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் செய்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். Continue reading விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்பாடுக்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்? – ஆனந்த மஹிந்திரா

6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு – அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம்

இந்தியாவில், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் தங்களின் வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள் என்று அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் ஆயிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் தொடர்புடைய துறை, உற்பத்தி துறை மற்றும் கட்டுமானத் துறை ஆகியா துறைகளில் கனிசமாக வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள். இதில் சேவை துறையில் மட்டும் ஒரளவு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்கிறது ஆய்வு. குறிப்பாக உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு குறைவது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. வேலைவாய்ப்புகள் குறைகிறது என்று மட்டுமில்லாமல் வேலை இழப்பு ஏற்படுவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து. Continue reading 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு – அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம்

RCEP – மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒப்பந்தம் – சோனிய காந்தி எதிர்ப்பு

மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒப்பந்தம் (RCEP – Regional Comprehensive Economic Partnership) தாய்லாந்தில் கையெழுத்தாக உள்ளதுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 16 ஆசிய நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தகம் இந்த ஒப்பந்தத்தினால் ஏற்படும், இதனால் இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகள், கடை வியாபாரிகள் மற்றம் சிறு வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இந்திய அரசின் பொருளாதார முடிவுகளினால் ஏற்கெனவே நமது நாடு பெரும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தினால் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது நமது நாட்டு வர்த்தகத்துக்கு … Continue reading RCEP – மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒப்பந்தம் – சோனிய காந்தி எதிர்ப்பு

பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்

என் மகன் தமீமிடம் (வயது 7), குழந்தையின் (சுஜித்) இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டேன் அதற்கு தமீம் யோசிக்காமல், அவனுடைய அம்மா அப்பா தான் என்றான். ஏன்? என்றேன் அவர்கள் தானே அவனை வெளியே விளையாட விட்டார்கள் என்றான். ஆம், குழந்தையின் பார்வையில் இது தாய் தந்தை மற்றும் அவர்களின் குடும்பம் தான் காரணம். இதைதான் இப்போழுது ரஜினியும் சொல்கிறார். எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. 70 வயதை கடந்த பெரியவர்களும் குழந்தைகள்தான் என்று. #savesujith தாஜூதீன் Continue reading பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்