03-நவம்பர்-2021
ஒன்றிய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் வரியை சுமார் 5 ரூபாய் நாடு முழுவதுக்கும் குறைத்துள்ளது, இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி அரசும் சுமார் 7 ரூபாய் மாநில வரியிலிருந்து குறைத்துள்ளது. ஆகையினால் புதுச்சேரியில் பெட்ரோலுக்கும் சுமார் 13 ரூபாயும், டீசலுக்கு சுமார் 19 ரூபாயும் குறைந்துள்ளது, இது உள்ளபடியே மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி.

புதுச்சேரி மக்களுக்கு, முதல்வர் ரங்கசாமி அவர்கள் வழங்கிய மிகப்பெரிய தீபாவாளி பரிசாக மக்கள் இதனை பார்க்கிறார்கள்.
புதுச்சேரியில் இன்று (03/11) பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58 க்கு விற்பனை செய்யப்படுகிறது.