தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் பாஜக.
30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க்கிறது அதுவும் முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.
பாஜக ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் குறிப்பாக மோடியின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை பெற்றுள்ளது.

இந்தியாவின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்கும் மோடி அவர்களுக்கு இந்திய மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே சமயத்தில் மோடி அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் படி விருப்பு வெறுப்பு இன்றி அனைவருக்குமான ஆட்சியை கொடுப்பார் என்கின்ற நம்பிக்கையில் இந்திய (தென்னிந்திய) மக்கள் இருக்கிறார்கள்.
I’m joining with you to wish them for their landslide victory, sir…
LikeLike