இந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம்.
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டு இருப்பது.
- வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம்
இன்று, பெட்ரோல் ஒரு லிட்டர் சுமார் 85 ரூபாய் மற்றும் டீசல் ஒரு லிட்டர் சுமார் 77 ரூபாய் என்ற விலைக்கு சென்னையில் விற்பனையாகிக் கொண்டுருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் செப்டம்பர் மாதம் முடியும் வரை குறைந்தது 10 ரூபாய் ஒரு லிட்டருக்கு விலையேற்றம் அடைந்துள்ளது. இப்படியே சென்றால், மிக விரைவாக பெட்ரோல் ஒரு லிட்டர் 100 ரூபாயிக்கு விற்பனையாகும் என்பதில் மாற்றுக்கருத்துக் இருக்காது.
இந்த விலையேற்றத்துக்கு மிக முக்கிய காரணம், மத்திய மற்றும் மாநிலத்தின் அதிகப் படியான வரி விதிப்பு. பெட்ரோல் மற்றும் டீசல் வரியின் மூலம் வரும் நிதியினால் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநிலத்தின் நிர்வாகம் நடைபெறுகிறது. ஆகையினால் தான் எந்த அரசும் தான் விதித்த வரியை குறைத்துக்கொள்ள முன்வருவதில்லை.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு பெட்ரோலுக்கு 27%யில் இருந்து 34%க்கும், டீசலுக்கு 21.4%யில் இருந்து 25%ஆக மாற்றியது. இதனை போன்று மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை அதிகமாக்கியது.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் எனப் பலமுனையிலிருந்து வரும் விலையேற்றத்தினால் பொது மக்களாகிய நாம் தான் அதிகமாக பாதிப்பு அடைகிறோம்.
இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்கள் மற்றும் அரசாங்ககளை விமர்சனம் செய்வது போன்ற செயல்களினால் விலையேற்றத்தை இப்பொதுள்ள சூழ்நிலையில் குறைத்துவிடமுடியாது என்பது நிதர்சனமான உண்மை.
ஆகையினால், நாம் நம் வாழ்க்கை முறையைச் சிறிய அளவு மாற்றியமைத்துக்கொண்டாலே இந்த மாதிரியான விலையேற்றம் நமக்கு அதிகம் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
- குறைந்த அளவுள்ள தூரத்துக்கு இடையே பயணிக்கும் பொழுது, நாம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தைத் தவிர்த்து நடைப்பயணமாகவோ அல்லது மிதிவண்டியின் மூலமாகவோ செல்லலாம்.
- பொது வாகனத்தை அதிகமாகப் பயன்படுத்தலாம், குறிப்பாக அதிகமான தூரத்துக்கு இடையே தினசரி பயணிக்கும் பொழுது.
- நமக்குத் தேவையான மற்றும் தினம் பயன் பெறும் பொருட்களை முடிந்த அளவு நம் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் வாங்கிக்கொள்ளலாம்.
- நகரங்களில், நம் பிள்ளைகளை பள்ளிக்கு ஆட்டோ அல்லது பள்ளியின் பேருந்து மூலம் அனுப்பிவைக்கலாம்.
பல வளர்ந்த நாடுகளில் இன்றும் மக்கள் அதிகமாக அவர்களின் பயணங்களை பொது வாகனங்களிலும், மிதிவண்டிகளிலும் மற்றும் நடைபயணங்களாலும் அமைத்துக்கொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவகள்.
இந்த மாதிரியான சிறிய மாற்றங்கள் நமக்கும் மட்டுமல்ல நம் நாட்டின் வளர்ச்சிக்கும் நிறையப் பயன்களைத் தரும்.
- Curde Oil இறக்குமதிக்கு ஆகும் அன்னிய செலவை குறைப்பது.
- பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தும் அளவை மக்களாகிய நாம் குறைத்துக்கொண்டால், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்குச் செல்லும் நிதியின் அளவு குறையும். ஆகையினால் அரசாகங்கள் மாற்று நிதி ஆதாரங்களுக்கான வழிமுறைகளை கையாலும். (நேர்மையான அரசு நேர்மையான வழியில் மாற்று நிதி ஆதாரங்களைத் தேடும் என்ற நம்பிக்கையில்)
மாற்றத்தை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்காமல், நம்மிடம் இருந்து ஆரம்பிப்போம். அழகிய நம் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்ப சிறிது முயற்சி செய்வோம்.
Yes. After somedays we will get petrol minimum₹100.
Finally we have to start using cycle.
LikeLike